Pages

வியாழன், 28 ஏப்ரல், 2011

Bottle Watter பற்றிய உண்மைச் செய்தி

bottledwater


அந்நிய மோகத்திலும் , ஆடம்பர சுகத்திலும் , சுகாதாரத்தை நாம் எவ்வாறு கெடுக்கிறோம் என்பது இந்த ஒளிப்பதிவில் நன்றாக விளக்கியுள்ளார்கள். நம் வீட்டு தண்ணீரை காய்ச்சிக் குடித்தால் அருமையாக இருக்கும்பொழுது, கேடு விளைவிக்கும் பாட்டில் தண்ணீர் என் வாங்க வேண்டும். யோசியுங்கள் , யோசிப்பது மட்டும் அல்லாமல் அதை செயல் படுத்துங்கள். மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
நன்றி"techtamil..கம்

கியாமத் நாளின் அடையாளங்கள்


மகளின் தயவில் தாய் 

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

புதன், 27 ஏப்ரல், 2011

இது ஒரு உண்மைச் சம்பவம்:


சவுதியரேபியாவின்  ரியாத் நகரில் உள்ள தனது வீட்டில் ஒருவர் படுக்கையறையில் கைத்தொலைபேசியை சார்ச்சில் இட்டுவிட்டு  உறங்கியிருகின்றார் அதே நேரம் பிறரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது அழைப்பு ஏற்ப்பு பொத்தானை அழுத்தியதும் உடனே
பாரிய சத்தத்துடன் கைத் தொலைபேசி வெடித்துருக்கின்றது.  உடனே உறவினர் அவரது அறைக்கு ஓடிச் சென்று பார்க்கையில் அவர் உணர்வற்ற நிலையில் கையில்  எரி காயங்களுடன் தரையில்  காணப்பட்டார். மறுகணமே அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்று தீவீர சிகிச்சைக்கு பிறகு அவருக்கு நினைவு வந்திருக்கிறது.

இந்த படங்களை பாருங்கள்:-


திங்கள், 25 ஏப்ரல், 2011

இந்திய இராணுவ சிப்பாயின் காம வெறிஇது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ வெறியனை மக்கள் பார்வைக்கு

அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்!இஸ்லாத்தில் ஏக இறைவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்பது கண்டிப்பான கட்டளையாகும். தனி மனித

உலகத்தை ஏமாற்றிய நவீன மோசடிக்காரர்களின், பணக்காரக் "கடவுள்" - சாயி பாபாவின் மரணம்

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள் :3
பெரும் சப்தம்


فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَاز نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ (69:8)
         ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால்அழிக்கப்பட்டனர்.  ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமை யானகொடிய காற்றால் 

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்யவில்லை


.
முஸ்லீம்கள் புரிய வேண்டிய சரியான கோணம்.
RASMIN M.I.Sc
கடந்த சில நாட்களாக முஸ்லீம்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாக ஹிஜாபும் மாறியிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டுப் பெண்கள் அணியும் ஆடையில் சில வகையான ஆடைகளை தடை செய்ததே இதற்கான காரணமாகும்

சனி, 23 ஏப்ரல், 2011

இணையம் என்னும் வசியக்காரன்….ஒரு பகீர் ரிப்போர்ட்!

Share
இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் ணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்? கேள்விக்கு விடையை கொடுக்க அவரவரின் மனோநிலைதான்

இன்ஸ்பெக்ட்டர் குடும்பத்தை வெட்டிக் கொன்ற ஆறு கொலை அமைச்சரும் அவரும் அராஜாகங்களும்...


வீரபாண்டி ஆறுமுகம் இந்தப் பெயரைக் கேட்டாலே பத்து மாசக் குழந்தையும் "பால்குடி"மறக்கும்.

பிராபாகரன் ஒரு சுய நலவாதி.


1990ஆம் வருசம் அமைதியின் பூங்காவாக திகழந்த இலங்கையில் அமைந்துள்ள காத்தான் குடி என்ற

புதன், 20 ஏப்ரல், 2011

ஒரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம்

ரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம் மிக முக்கிய காரணமாகிறது.

வரலாற்று ஆசிரியர் எட்வாட் கிப்பன், ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்களைப் பட்டியல் இடுகிறார்.

ஆபாசம் நின்று கொல்லும்’ரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம் மிக முக்கிய காரணமாகிறது.

வரலாற்று ஆசிரியர் எட்வாட் கிப்பன், ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்களைப் பட்டியல் இடுகிறார்.

1,திருமண முறிவுகள் அதிகமானது

2.அதிக வரி வசூலித்து மக்களுக்கு இலவச ரொட்டியும் கேளிக்கைகளும் அளித்தது

3.இன்ப வெறி-அதுவும் விளையாட்டுப் போட்டிகள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது.

4.மக்களின் தரம் தழ்ந்ததை உணராமல்,படைக்கலன்களை வாங்கிக் குவித்தது.
                                                                                                                                                                          
5.சமயம் என்பது வெறும் குறியீடாக மாறி தினசரி வாழ்க்கைக்கு சம்பந்தம் 
இல்லாமல் போனது.

இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் கேளிக்கையில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் -நுகர்வுகளில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் அழிவுகளின் பக்கமாகத்தான் செல்ல வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய மேலை நாடுகள் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

அங்கு நிலைமை என்ன? திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.லிவிங் டுகெதர் -கொஞ்ச நாளைக்குச் சேர்ந்து வாழ்வோம்; பிரிந்து விடுவோம்; கல்யாணமெல்லாம் தேவையில்லை என்கிற நிலை அங்கு உருவாகி விட்டது.

திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது மிகச் சாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது.

இதன் காரணமாக சிங்கிள் பேரண்ட் ஃபேமிலி -தாயுடனோ அல்லது தந்தையுடனோ வாழும் நிலை. மொத்தத்தில்,குடும்ப வாழ்வே அங்கு சிதைந்துப் போய் விட்டது.

இன்று ஆபாசம் ஆக்டோபஸ் மாதிரி ஆகி விட்டது. அதனுடைய கால்கள் பதிக்காத இடமே இல்லை. ஆபாசத்திலிருந்து தப்பிக்க முடியாத நிலை இன்று உருவாகி விட்டது.

ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்கிற போது, இந்த ஆபாசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்று சொல்கிறார்கள். ஆபாசத்தை வரையறை செய்யவே முடியாது என்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள், காலத்துக்கு காலம் இதனுடைய வரைமுறை மாறும் என்கிறார்கள்.

இங்கே ஆபாசமாகக் கருதப்படுவது மேலை நாட்டில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை; ஒரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவது இன்னொரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை.

ஆகவே ஏன் தலையைப் போட்டு உடைத்துக் கொள்கிறீர்கள்? இது முடியவே முடியாத காரியம் என்று சொல்கிறார்கள்.

ஏன் முடியாது? ஆபாசத்தை ஏன் வரையறை செய்ய முடியாது?
.மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காதிருந்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.மறைவில் பேச வேண்டியதை வெளியில் பேசினால் ஆபாசம்.

.நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை வெளிப்படையாகச் செய்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு எந்த உறவை வைத்துக் கொண்டாலும் அது ஆபாசம்.

.இச்சைகளையும் வக்கிரங்களையும் தூண்டக் கூடிய எல்லாச் செயல்களும் ஆபாசம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பு.


இன்று சினிமாவிலே பெண்களை ரசித்துப் பார்க்கிறீர்களே, உங்கள் பெண்களை இது போன்ற காட்சிகளில் நடிக்க விடுவதற்கு தயாரா?

உங்களுக்கு பாவம் என்றால், உங்களுக்கு ஆபாசம் என்றால்,உங்களுக்கு அசிங்கம் என்றால் அந்தப் பெண்களுக்கும் அது ஆபாசம் தான்.

ஒரு தீமைக்கு உடனடியாக யாரும் பலியாகி விடுவதில்லை. அது சில கட்டங்களைக் கடந்து வருகிறது.

முதலாவதாக அப்சர்வேஷன் -பார்த்தல்; இரண்டாவதாக இமிடேஷன் -அதைக் காப்பி அடித்தல்; மூன்றாவதாக டிசென்சிடிசெஷன்  -மரத்துப் போதல். கடைசியில் ஜஸ்டிபிகேஷன் -அதை நியாயப்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறோம்.

நாமே இதற்குப் பலியாகி விட்டோமே! குடும்பத்தோடு உட்கார்ந்து சினிமா பார்க்கிறோமே! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பார்க்கிறோமே! அப்படியானால் நாம் மரத்துப் போன மனிதர்களாக மாறி விட்டோம் என்பதுதானே பொருள்?

மக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும்? மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள்.

நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா?

ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி...! தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை.

பெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம்.
அடுத்து ஆணாதிக்க உணர்வுகள் ஒரு காரணம்.

அடுத்தப்படியாக கட்டுபாடற்ற பாலியல் சுதந்திரம். செக்ஸ் எனபது சுதந்திரமானது. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்?நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் குறுக்கிடாதீர்கள் எனும் மனப்பான்மை.

மக்களிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம்.

ஆபாசத்தை எதிர்ப்பது எப்படி?

ஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.


’ஆபாசத்தைப் பார்க்கதே; ஆபாசத்தைப் பேசாதே; ஆபாசத்தைச் செய்யாதே!

உங்கள் கண்களை,உங்கள் காதுகளை,உங்கள் நாவை,உங்கள் கால்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


வெட்கத் தலங்களின் மூலம் நிகழ்த்தப்படுவது மட்டுமல்ல ஆபாசம்...!
‘கண்கள் செய்யும் விபச்சாரம்;காதுகள் செய்யும் விபச்சாரம்;கால்கள் செய்யும் விபச்சாரம்’ என்று நபிகள் (ஸல்) அவர்கள் பட்டியல் போட்டார்கள்.

 இறுதியாக, ஆபாசத்தை வளர்க்கிறார்களே அவர்களிடம் ஒரு வேண்டுகோள்:
‘உங்கள் வயிற்றை வளர்ப்பதற்காக எங்கள் ஒழுக்கத்தைச் சாகடிக்காதீர்கள்

கடல்கள் இடையே உள்ள திரைகள்


 


  مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَنِ  بَيْنَهُمَا بَرْزَخٌ لاَّيَبْغِيَن
    அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள் (வீடியோ இணைப்பு)ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந்தன.

பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணரமுடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச்சலைப் பதிவு செய்துள்ளனர்.

வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல்கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள கடலடி ஒலிவாங்கியின் மூலமே இவ்விரைச்சல் ஒலிப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

அச்சத்தமானது ஏதோ பொருள் ஒன்று நொருங்குவதினைப் போல உள்ளது.

தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ள அவ்விரைச்சலை நீங்களும் கேளுங்கள்.thanks for manithan.com

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம் வெளியீடு இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது. 

அல் ஹதீஸ்


    பெரும் பாவங்கள்
    பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ
    
    பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

பேனையைத் திருடிய ஜனாதிபதி! (காணொளி, பட இணைப்பு)
செக் குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் சிலி நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது சம்பிரதாயபூர்வமான ஒரு பேனையை திருடுவது போன்ற விடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் பாவிக்கும் பேனையை செக் ஜனாதிபதி உன்னிப்பாக அவதானித்து,பின் அந்தப் பேனையை கீழே வைத்ததும் அதை எடுத்து தனது பொக்கட்டில் போட்டுக் கொள்வது போன்று இந்தக் காட்சி அமைந்துள்ளது. இணையங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சியை இரு தினங்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.
இராஜதந்திர நடைமுறைகளின் பிரகாரம் இந்தப் பேனையை ஒரு நினைவுச் சின்னமாக செக் ஜனாதிபதி எடுத்துக் கொள்ள முடியும். இருந்தாலும் இணையப் பாவணையாளர்கள் இதை ஒரு திருட்டாகவே முத்திரை குத்தியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகையொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செக் குடியரசின் தலைநகரில் இவ்வாறான நிகழ்வுகளின் போது வருகை தரும் தலைவர்கள் பலருக்கு இது போன்ற பல பேனைகள் நினைவுச் சின்னங்களாக வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் எமது ஜனாதிபதியும் அதை எடுத்துக் கொண்டதில் எந்தத் தப்பும் கிடையாது என்று செக் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உலகில் மிகப் பயங்கரமான, கொடூரமான, பயங்கரவாத இயக்கம் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ.

உலகிலேயே மிகமோசமான மனித அவலத்தை உருவாக்கி, அதைக் கொண்டு வாழும் அமெரிக்கா புலியைப் பற்றி கூறுவது

திங்கள், 18 ஏப்ரல், 2011

கடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கி - SAI BABA
தன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கியால், தன் அற்புதங்கள் மூலம்

அன்னா ஹசாரே கைதாவாரா? பரபரப்பு செய்தி!!


ஏப்ரல் 18, ஊழலுக்கு எதிராக பாசிஸ்டுகளுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த காந்தியவாதியின் ஊழல்! இவர் செய்த ஊழலை பார்த்து அரசியல்வாதிகளே கலங்கிபோய் இருக்கிறார்கள்! இதோ அன்னா ஹசாரே ஊழல் விவரம்!

அன்னா ஹசாரே கைதாவாரா? பரபரப்பு செய்தி!!ஏப்ரல் 18, ஊழலுக்கு எதிராக பாசிஸ்டுகளுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த காந்தியவாதியின் ஊழல்! இவர் செய்த ஊழலை பார்த்து அரசியல்வாதிகளே கலங்கிபோய் இருக்கிறார்கள்! இதோ அன்னா ஹசாரே ஊழல் விவரம்!

அண்ணா ஹசாரே தலைமை வகிக்கும் ஹிந்த் சுராஜ் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்திய ஊழலை பற்றிய ஜுடிசியல் விசாரணையின் விபரங்கள் இதோ!

இந்த டிரஸ்ட் உதவி தலைவர் சந்திபூசனும் இதில் உறுப்பினரான பிரசாந்த் பூசனுக்கும் சம்பத்தப்பட்ட சீ. டி வெளியில் வந்த பிறகு கதாநாயகன் ஹசாரே உடைய ஊழல் வெளியில் வந்து பரப்பரப்பை உண்டாக்கி கொண்டிருகிறது.

அந்த இருவர்களுடை வீடியோவில் சில சந்தேகங்கள் இருந்தாலும் ஹசாரே சம்பந்தப்பட்ட ஊழலில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்து இருகிறார்கள்.

அண்ணா ஹசாரே தன்னுடையே பிறந்தநாள் தினத்திற்கு டிரஸ்ட் உடைய பணம்
இரண்டரை லட்சம் பணத்தை சட்டவிரோதமாக செலவளித்தது.

மத சார்பற்ற கல்வி படிப்பதற்காக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை
கோவில் கட்டுவதற்காக கொடுத்தார் என்றும் விசாரணை கமிஷன் கூறி உள்ளது.

இந்த நிறுவனத்திற்கு அரசு ஒதுக்கி கொடுத்த நிலத்தை சட்டவிரோதமாக வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் கணக்குகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளதாக மகாராஷ்டிரா மத்திரி சுரேஷ் ஜெயின் குற்றம் சுமத்தி இருந்தார்.

அலஹபாதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம் வாங்கியதில் முத்திரைதாள் வாங்கியதில் கள்ள கணக்கு காட்டியிருப்பதாக மகாராஷ்டிரா அரசுசுக்கு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் 1995 இல் இவர் ட்ரஸ்ட்க்கு சொந்தமான பணத்தை தனது பிறந்த நாளைக்கு செலவழித்தார் என்பது விசாரணை கமிசனால் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்தான் நேர்மை ஊழல் என்று பேசுகிறார்.

ஒரு ட்ரஸ்ட்க்கு சொந்தமான பணத்தை எடுத்து தனது பிறந்த நாள் விழாவுக்கு செலவு செய்வது ஒரு காந்தியவாதின் அழகு இல்லை. ட்ரஸ்ட்க்கு சொந்த மான நிலத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு எழுதி கொடுத்தது மட்டுமல்லாமல் அதை பதிவு செய்யும்போது முத்திரை தாள் மோசடி செய்வது என்பது ஒரு கேவலமான செயல். ஊழழலை பற்றி பேச அன்னா ஹசாரேக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

ஓஓஓ இதுதான் காந்திய தருமமோ ?


வாசகர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நல்லவர்கள் ஒரு நாளும் ஹிந்துத்துவா பாசிஸ்ட்களோடு சேரமாட்டார்கள்.

முரசு............................................................ முழங்கும்.thanks fro sinthikkaum

நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா சகோ..?"உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ." என்ற என் சென்ற பதிவில், செல்ஃபோனை காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் (1/4

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

பிறர் புகையால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை 6 லட்சம்
"பேசிவ் ஸ்மோக்கிங்என்றுஆங்கிலத்தில் அழைக்கப்படும் தான் புகைபிடிக்காமல்

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால்
தாய்ப்பாலிலுள்ள'ஹேம்லெட்என்ற பொருள்40வகையான புற்றுநோய்செல்களை அழிக்கும் திறன்பெற்றுள்ளது என,ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிகண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த போது,

தாய்ப்பாலிலுள்ள'ஹேம்லெட்என்ற பொருள்40வகையான புற்றுநோய்செல்களை அழிக்கும் திறன்பெற்றுள்ளது என,ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிகண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த போதுதற்செயலாககண்டுபிடிக்கப்பட்டது தான், 'ஹ்யூமன் ஆல்பாலாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்!இதன் சுருக்கம்தான், 'ஹேம்லெட்!'

மனித உடலில், 'ஹேம்லெட்என்னபங்காற்றுகிறது என்பது இதுவரைகண்டறியப்படவில்லைசமீபத்தில்ஸ்வீடன் நாட்டின்லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க்பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்தியஆய்வில்இந்த 'ஹேம்லெட்மனித உடலிலுள்ள 40வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பதுகண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் போதுசிறுநீர் பை புற்றுநோயால்பாதிக்கப்பட்ட சிலருக்கு, 'ஹேம்லெட்கொடுக்கப்பட்டுசோதனை நடத்தப்பட்டதுஅப்போதுசிறுநீருடன்புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியதுகண்டறியப்பட்டதுஇதன் மூலம்புற்றுநோய்க்கானசிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்றுநிபுணர்கள் கருதுகின்றனர்'ஹேம்லெட்புற்றுநோய்செல்களை மட்டுமே அழிக்கிறதுமற்ற செல்களைபாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'ஹேம்லெட்எப்படி புற்றுநோய் செல்களைஅழிக்கிறது என்பது குறித்துஆய்வு நடந்து வருகிறது.குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, 'ஹேம்லெட்அங்குஅமிலத் தன்மையைஉருவாக்குகிறதுஅதன் மூலமேகேன்சர் செல்கள்அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறுமனிதனுக்கு வலியுறுத்தினோம்அவனை அவனதுதாய் சிரமத்துடன் சுமந்தாள்சிரமத்துடனேஈன்றெடுத்தாள்அவனைச் சுமந்ததும்பால் குடியைமறந்ததும் முப்பது மாதங்கள்அவன் தனது பருவவயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது"என் இறைவாஎனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்தஅருட்கொடைக்கு நன்றி செலுத்தவும்நீ பொருந்திக்கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும்வாய்ப்பளிப்பாயாகஎனக்காக எனது சந்ததிகளைச்சீராக்குவாயாகநான் உன்னிடம் மன்னிப்புக்கேட்கிறேன்நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்றுகூறுகிறான்.
அல்குர்ஆன் 46:15
ஆனால்46:15வது வசனத்தில் பாலூட்டும்காலத்தையும்கர்ப்ப காலத்தையும் சேர்த்துக்குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்றுதிருக்குர்ஆன் கூறுகிறது.
அதில்பாலூட்டும் காலங்கள் என்று இறைவன்கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை)கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று ஆகிறதுஒருகுழந்தையின் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று எந்தக்காலத்திலும் எவரும் கூறியதில்லைஏறத்தாழ பத்துமாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கிவைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்டகாலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.
கர்ப்ப காலம் பத்து மாதம் என்று அனைத்துமனிதர்களும் விளங்கி வைத்திருக்கும் போது, "கர்ப்பகாலம் ஆறு மாதம்''  என்று குர்ஆன் கூறுகிறது என்றால்வேண்டுமென்றே தான் அவ்வாறு கூறுகிறதுஇந்தஇடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான்பொருத்தமானதாகும்.
இறைவன் வேண்டுமென்றே அனைவரும் தெரிந்துவைத்துள்ள நிலைக்கு எதிராகக் கூறுகிறான் என்றால்இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து,கரு வளர்ச்சியை ஆராயும் போது இவ்வசனம் இறைவார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும்அதிசயத்தைக் காண்கிறோம்.
மனிதனுக்கு என்று தனியான வித்தியாசமானவடிவம் உள்ளதுமற்ற விலங்கினங்களுக்கு என்றுதனியான வடிவம் இருக்கிறதுமனிதன் கருவில்விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான்பின்னர்கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான்.அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான்இந்தக்காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தைஎடுப்பதில்லைதாயின் கருவறையில் இருக்கும் ஆடுஎவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோஅது போலவே மனிதனும் இருக்கிறான்கைகளோ,கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.
கருவறையில் இந்த நிலையை அடைந்தஇறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது.இது இன்ன பிராணிக்குரியது என்றெல்லாம் கூறமுடியாதுஆய்வும்சோதனைகளும் நடத்திப்பார்த்தாலும் அதில் மனிதனுக்குரிய அம்சம் ஏதும்இருக்காது.
இந்த நிலையைக் கடந்த பின் தான் மனிதனிடம்உள்ள செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன.அதன் பின்னர் தான் மனிதன் என்றுசொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும்உறுப்புகளுடனும் அது வளரத் துவங்குகிறது.
மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும்,மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள்மொத்தம் ஆறு தான்அதற்கு முந்திய கால கட்டத்தில்மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத்தன்மையும் அடையாளமும் இல்லாத இறைச்சித்துண்டு தான் கருவில் இருந்தது.
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம்சதைத்துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும்அணிவித்தோம்பின்னர் அதை வேறு படைப்பாகஆக்கினோம். (23:14)
பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம்ஆக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான்இந்தநிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும்ஒன்று தான்அதன் பின்னர் ஆடு ஆடாகவும்மாடுமாடாகவும் மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலைஉருவாகிறதுஎனவே அதை மற்றொரு படைப்பு என்றுஇறைவன் கூறுகிறான்இதையே தான் மனிதனை தாய்ஆறு மாதம் சுமந்தாள் என்ற வசனமும் கூறுகிறது.