Pages

புதன், 30 மார்ச், 2011

சென்னையில் பள்ளியை இடித்து ஆக்கிரமிக்கும் முயற்சி முறியடிப்பு!Print
E-mail


எல்லாப்புக​ழும் இறைவனுக்கே!


சென்னை பாரிமுனையில் பிராட்வே சாலையில் இமேஜ் ஆப்டிக்கல் என்ற கண்ணாடி ஷோரூம் அமைந்துள்ளது. அந்தப்பகுயில் வந்து செல்லும் மக்கள் தொழுவதற்கு இடம் தேடி மிகவும் சிரமப்படும் அப்பகுதி மக்களின் அவலத்தைக்கண்ட‌ அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உமர் அப்துல்லாஹ், அந்த கட்டி...டத்தின் முதல் தளத்தின் ஒரு பகுதியை தொழுகை நடத்துவதற்கு பள்ளி அமைத்துக்கொள்ளலாம் என தானமாக வழங்கியிருக்கிறார். மட்டுமின்றி இனி அந்த இடத்திற்கு தானோ தன் வாரிசுகளோ உரிமை கொண்டாட மாட்டார்கள் எனவும் வாக்குறுதி

செவ்வாய், 29 மார்ச், 2011

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.ஏன்? ,தொடர்.இன்சாஹ் அல்லாஹ்
بسم الله الرحمن الرحيم

இயற்கை சீற்றங்கள்ஏற்படுவதற்குகாரணங்கள்

பூகம்பம்சுனாமிஏற்பட்ட நாடுகள்

பசிபிக்பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.
1700, ஜனவரி : அமெரிக்காவில் பூகம்பம்ரிக்டர் அளவு 9 புள்ளி.இதனை தெடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.

திங்கள், 28 மார்ச், 2011

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது


[ திங்கட்கிழமை, 28 மார்ச் 2011, 07:35.44 மு.ப GMT ]
ஜப்பானில் 6.5 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
ஜப்பானில் கடந்த 11 ந் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் கடும் சேதம் ஏற்பட்டது. சுமார் 27 ஆயிரம் பேர் பலியானார்கள். நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகள் வெடித்து சிதறின. எனவே அதில் அணு கதிரியக்கம் கசிய தொடங்கியது.
பால், குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இடிபாடுகள் அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.23 மணியளவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹான்ஷீ நகரில் பூமி குலுங்கியது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்து ஆட்டம் கண்டன. இதனால் பதறிய மக்கள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது என அச்சம் அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
சிறிது நேரம் கழித்து சமாதானம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹான்ஷீ கடலில் வழக்கத்தைவிட சுமார் 1.6 அடி அதாவது 1/2 மீட்டர் உயரத்துக்கு அதிகமாக அலைகள் எழும்பியது. இதை தொடர்ந்து அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானுக்கு மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் தீவை சுனாமி அலைகள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது. இதற்கிடையே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அமெரிக்காவில் புவியியல் சர்வே மையம் அறிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 5.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. தொடர்ந்து ஏற்படும்  நிலநடுக்கத்தால் ஜப்பான் மக்கள் பீதியில் உள்ளனர்.

ஞாயிறு, 27 மார்ச், 2011

ஜப்பானின் புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு 10 மில்லியன் மடங்கு அதிகரிப்பு!ஜப்பானின் இரண்டாவது மிகப்பெரும் அணு உலையான புகுஷிமா டாயிச்சி சக்தி மையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நீரில் மீண்டும்  கதிர்வீச்சு (Radiation) அளவு பரிசோதனை செய்யப்பட்டதில் முன்னர் இருந்ததை விட சுமார் 10 மில்லியன் மடங்கு கதிர்வீச்சு தாக்கம் செலுத்தியுள்ளதாக இன்று ஜப்பான் அறிவித்துள்ளது.இச்சோதனை நிலையம் ஒவ்வொரு 53 நிமிடத்திற்கும் ஒரு முறை, முன்னர் இருப்பதிலிருந்து அரைமடங்கு தனது குளிர்நிலையை இழந்துவருவதால், கதிர்வீச்சு தாக்கம் இவ்வாறு அதிகரித்துள்ளது. 
கதிர்வீச்சு தாக்கம் அதிகரித்துள்ளது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் இதனால் விழையப்போகும் எதிர்மறையான உடல் ஆரோக்கிய நிலைமைகள் பற்றி எம்மால் எதிர்வு கூற முடியாதுள்ளது என ஜப்பானின், கைத்தொழில் மற்றும் அணி ஆராய்ச்சி பாதுகாப்பு முகவர் நிலையத்தின் அதிகாரி ஹிடேஹிகோ நிஷ்ஹியாமா தெரிவித்துள்ளார்.இதேவேளை அதிகரித்துவரும் கதிர்வீச்சு தாக்கம் காரணமாக ஜப்பானின் கடல் மட்டத்தில் கதிரியக்க தாக்கம் சாதாரண நிலைமையை விட 1,850 மடங்கு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது!! கலைஞர்!!மார்ச் 27, : அதிமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமிய பெருமக்களை ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

10 ஆண்டுகாலம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் இடஒதுக்கீடு செய்யவில்லை. இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சியில் தான் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

வளைகுடா அரபு நாடுகள் லெபனான் ஷியாக்களை வெளியேற்ற திட்டம்?


வளைகுடா நாடுகள் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான லெபனானிய ஷியா வகுப்பு முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரானின் புரட்சி படை போன்ற இயக்கங்களுடன் லெபனானிய ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை வளைகுடா நாடுகளிலிருந்து வெளியேற்ற அந்நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
குவைத் அரசு பஹ்ரைன் அரசுக்கு அதரவாக படை அனுப்ப முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், குவைத்தில் ஷியா பிரிவினர்கள் பஹ்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளார்கள். பஹ்ரைனில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 90 லெபனானிய ஷியாக்களை அந்நாட்டை விட்டு பஹ்ரைன் வெளியேற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- குவைத்திலிருந்து ஜைனுல் ஹுசைன்.
thanks for inneram.com

இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
திருக்குர்ஆன் இறைவனிடம் இருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கு வேறு எங்கும் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. திருக்குர்ஆனே நிறைய சான்றுகளை தருகிறது.
சிலர் 1400 வருடங்களுக்கு முன்னர் இறக்கப்பட்ட வேதத்தில் எப்படி இந்தக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை விஞ்ஞான உண்மைகளைப்பற்றி சொல்லப்பட்டிருக்கும். என்ற கேள்விகளை தொடுக்கிறார்கள்.

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன


 அல்லாஹ்அக்பர் நல்ல முடிவு 


வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.

சனி, 26 மார்ச், 2011

குவைத்தில் புழுதிப்புயல் புழுதிமூட்டம் தொடர்ந்து சாலைகள் தெரியாத அளவுக்கு தூசி மூடிக்கொண்டே வருகிறது


78:5 புகை மூட்டம்,பூகம்பம்,பெருநெருப்பு இறுதிநாளின் அடையாளம்

    ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5)

வெள்ளி, 25 மார்ச், 2011

அல்குர்ஆன் கூறும் சூறாவளி எச்சரிக்கைகள்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்  உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும்திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,)பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்றுஅ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளைஉங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) 

வியாழன், 24 மார்ச், 2011

கால் மூட்டு வலி

நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்ற பழமொழி உண்டு.  இந்த பழமொழியின்  பொருளை  நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள்

குர்-ஆன் கூறும் பூமி..                                       ஒரிறையின் நற்பெயரால்
     விஞ்ஞான கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் குர்-ஆனில் அதிகமாக இடம்பெற்றாலும் அவ்வனைத்து வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வல்லமையை பறைச்சாற்றறுவதே பிரதான நோக்கமே தவிர அறிவியல் புத்தகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காக அல்ல.எனினும் குர்-ஆன் மீது அவதூறு கற்பிக்கும் நோக்கோடு களமிறங்கிய பரிணாமம் மூலம் பகுத்தறிவு பெற்றவர்கள் அவ்வபோது குர்-ஆன் கூறும் பொருளை வழக்கம்போல் தவறாக புரிந்து அதன் அடிப்படையில் கேள்விகளை

புதன், 23 மார்ச், 2011

ஃப்ளோரிடாவில் திருக்குர்ஆனை எரித்த கிறிஸ்துவ பாதிரி!


ஃப்ளோரிடாவில் திருக்குர்ஆனை எரித்த கிறிஸ்துவ பாதிரி! – அமெரிக்காவில் பரபரப்பு!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, March 22, 2011, 18:24
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜர்ச்சில் பாதிரியார் ஒருவானால் கடந்த வாரம் திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில், தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பனால் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியார் வெறு யாரும் இல்லை ஏற்கனவே கடந்த ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, தீவிரவாதிகள் 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று குரானை எரிக்கப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவன் தான்..
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய் களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
அல்குர்ஆன் 61-9,10
thanks for online pj.com

திங்கள், 21 மார்ச், 2011

குங்குமபூ

குங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறையும்!!!

இந்த இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்தத் தாள்களே குங்குமம் ஆகும். இது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனைத் தண்ணீரில் இட்டால் கொஞ்ச நேரத்தில் தண்ணீரும் இதன் நிறமாக மாறிவிடும்.

எம் மீது பயங்கரவாத தாக்குதல்கள் - கர்னல் கடஃபி


 
பென்காசி அருகே இராணுவ வாகனங்கள் மீது போர் விமானங்கள் குண்டுமழை
லிபியா மீது மேற்கத்தைய நாடுகள் நடத்தியுள்ள தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதல்கள் என விமர்சித்துள்ள லிபிய தலைவர் கர்னல் கடஃபி, இந்த தீவிரவாத தாக்குதல்களை தாங்கள் முறியடிப்போம் என கூறியுள்ளார்.
அரச தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரையில், லிபிய மக்கள் அனைவரும் ஆயுதம் தரித்திருப்பதாகவும், லிபியாவின் எண்ணெய் வளத்தை மேற்கத்தையர்கள் அபகரிப்பதை தடுக்க தாங்கள் நீண்ட போர் ஒன்றை புரிய தயாராக இருப்பதாகவும் கூறினார்.
போர் தொடுத்துள்ள அன்னிய படைகளை ஜெர்மனியின் நாசி படைகளோடு ஒப்பிட்ட அவர், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் சூளுரைத்தார்.
இதற்கிடையே அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் செலுத்தப்பட்ட 110 ஏவுகணைகளால் ஏற்பட்ட பாதிப்பை இராணுவ அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பென்காசி நகரம் அருகே பிரான்ஸ் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், கிட்டதட்ட 14 உடல்கள் இராணுவ வாகனங்கள் அருகே கிடந்ததை தான் காணக்கூடியதாக இருந்ததாக ராய்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
விமான தாக்குதல்கள் தொடர்பில் லிபிய தொலைக்காட்சியில் வெளியான செய்திகளில் கிட்டதட்ட 150 பேர் காயமடைந்து, 48 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான படங்களும் காண்பிக்கப்பட்டன.
லிபியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க இராணுவ தலைமை அதிகாரியான அட்மிரல் மைக் முல்லன் கூறியுள்ளார்.
தலைநகர் திரிபோலி மற்றும் மிசாராடா நகரத்தில் உள்ள கிட்டதட்ட 20 வான் பாதுகாப்பு மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க மற்றும் பிரிட்டன் கடற்படைகள் ஏவுகணைகளை ஏவி வரும் நிலையில், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் விமானங்களும் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பி-2 வகை விமானமும் குண்டுகளை வீசி வருகிறது.
ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மேற்கத்தைய இராணுவ அதிகாரிகள் அவசரமாக ஆராயவுள்ளனர். பாதிப்பின் அடிப்படையில் எவ்வகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று பிபிசியின் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்தியாளர் ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகின்றார்.
இதற்கிடையே, கர்னல் கடஃபிக்கு ஆதரவான படைகள் மிசராடா மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கிளர்ச்சியாளர்களின் சார்பில் பேசவல்ல ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
லிபியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அங்கு அதிகரித்து வரும் வன்முறையால் பொது மக்கள் பாதிக்கப்படுவது தமக்கு மிகுந்த கவலையை கொடுப்பதாகவும், ஆயுத பலத்தை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலமே க்ருத்து வேறுபாடுகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 
 thanks www.bbc.co.

 

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஆழ் கடலின் அலையும் இறைவேதத்தின் நிரூபணமும்கடலின் மேற்ப்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன. கடலின் ஆழத்தில் ஏற்ப்படும் பேரலைகள் சுனாமியாகச் சீற்றமடைகிறது.என்ற உண்மையை சுனாமிக்குப் பிறகே மனிதர்கள் பரவலாக அறிந்து கொண்டனர்.

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன என்ற பேருண்மையைத் திருக்குர் ஆன் தெளிவாக கூறி இது இறைவனின் வார்த்தை தான் உறுதிப் படுத்துகிறது.

அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. திருக்குர் ஆன் 24:40

இவ்வசனத்தில் கடலைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும் கூறுகிறான்.

கடலின் மேற்ப்பரப்பில் அதுவும் கடற்க்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது.

கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்ச்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
thanks for .unmaikural.blogspot
கடல் ஆழத்தைபற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாக கூறியிருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.

எனவே திருக்குர் ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது.

சுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன


சுற்றுச்சூழல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சுற்று சூழல் என்றால் என்ன?

மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு 5 வகையான ஏற்பாடுகளை இறைவன் வகுத்துள்ளான். அவைகளாவன
:1)      நிலம்
2)      நீர்
3)      காற்று
4)      ஆகாயம்
5)      நெருப்பு

இறைவன் வகுத்து வைத்துள்ள இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.

வெள்ளி, 18 மார்ச், 2011


‘ஹுத்ஹுத்’ (الْهُدْهُد)  மரங் கொத்திப்பறவை
மரங்கொத்திப் பறவை ஒரு அற்புதமான பறவை. நினைவாற்றல், பேச்சாற்றல்,உணவை சேகரித்தல், உளிபோன்ற கூரிய அலகுகள்

கோபம் தன்னையே அழித்து விடும்

Post image for கோபம் தன்னையே அழித்து விடும்
உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)


மண்ணறை

நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள்

புதன், 16 மார்ச், 2011


 

3ஆம்  அணு உலை வெடித்தது: ஜப்பானில் அச்சம்

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலையத்தில், நேற்று காலையில் மூன்றாம் எண் அணு உலை வெடித்தது.

செவ்வாய், 15 மார்ச், 2011


2030 ஆம் ஆண்டில் மணமகள் கிடைப்பது கடினம்

டொரான்டோ,மார்ச்.15:இந்தியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பின் காரணமாக 2030 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு திருமணம் முடிக்க மணப்பெண் கிடைப்பது அரிதாகும் என கனேடியன் மெடிக்கல் அசோசியேசன் ஜெர்னலில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

20 சதவீதம் ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்கமாட்டார்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேற்கண்ட நாடுகளில் 105 ஆண் குழந்தைகள் பிறக்கும் பொழுது 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர். இது சில கொரிய நகரங்களில் 125 வரை எட்டியுள்ளது.

கர்ப்பத்திலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதுக் குறித்து பரிசோதனைச் செய்யும் ஸ்கேனிங் செண்டர்கள் கட்டுப்பாடுகளில்லாமல்
செயல்படுவதால் பெண் சிசுக்கொலை அதிகரிப்பதற்கு காரணமாகும்.


அச்செடுக்க
கூட்டணி விவகாரத்தில் கருணாநிதிக்கு நெருக்கடி அளித்து 63 தொகுதிகளை திமுக விடமிருந்து பெற்றது போல,காங்கிரஸ் மேற்கு வங்கத்தில்  மம்தா பானர்ஜியிடம் தன் ஆதிக்கத்தை 'காண்பிக்க' முடியவில்லையாம்.

"நான் கருணாநிதி இல்லை; என் கட்சி தி.மு.க.,வும் இல்லை. தி.மு.க.,வை மிரட்டியது போல, எங்களிடம் காங்கிரஸ் வாலாட்ட முடியாது' என்று சொல்கிறாராம் மம்தா. காங்கிரசில் மம்தா கட்சி இணைய வேண்டும் என்று சில காங்., தலைவர்கள் சொன்னதற்கு, என்றைக்கு ராகுல் பிரதமர் பதவியில் அமர்கிறாரோ, அன்று எங்கள் கட்சி காங்கிரசோடு ஐக்கியமாகும் என்று கிண்டலடித்துள்ளாராம் மம்தா.

மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுடன் மேற்கு வங்க தொகுதி பங்கீடு தான்.மேற்கு வங்க சட்டசபையில் 294 தொகுதிகள் உள்ளன. இதில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 90 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருக்கிறது.ஆனால், மம்தாவோ 58 தான் தர முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது போதாதென்று, காங்கிரசை, இன்னொரு பிரச்னையிலும் சிக்க வைத்துள்ளார் மம்தா.அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. அங்கு எதிர்க்கட்சிகள் பலம் குறைந்ததாக இருப்பதால், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மண்ணைப் போட திட்டமிட்டுள்ளார் மம்தா. திரிணமுல் கட்சி, அசாமிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் காங்கிரசின் இடங்களை குறைக்க, மம்தாவின் திட்டம் இது.

வெற்றி பெறுகிற மாநிலத்திலும், எதற்கு தோல்வி அடைய வேண்டும் என்று தற்போது மேற்கு வங்க தொகுதிகளை குறைத்துக் கொள்ளவும் காங்கிரஸ் இறங்கி வந்துவிட்டது. அசாமில் போட்டியிடாதீர்கள். எங்களுக்கு மேற்கு வங்கத்தில் குறைவான இடங்களை கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால், வெற்றி பெறும் தொகுதிகளை கொடுங்கள் என்று மம்தாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது

ஜுமுஆத் தொழுகை


நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால்
அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!
நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத்
தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 62:9,10
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஜுமுஆ நாளில் சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் ( ரலி) உமர் (ரலி) ஆகியோரது
காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்கு முன்) சொற்பொழிவு மேடை மீது
அமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தின்
போது மக்கள் தொகை உயர்ந்து விட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ
நாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட் டார்கள்.
ஆகவே , ( மதீனாவின் கடைவீதியிலுள்ள) ஸவ்ரா எனுமிடத்தில் தொழுகை
அறிவிப்புச் சொல்லப்பட்டது. (தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு
ஒரு இகாமத் எனும்) அந்த நிலை நிலைபெற்று விட்டது.
நூல்: புகாரி 916
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 1535
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை
நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதன் முதலாக உள்ளே
நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை)
எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு)
வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு
ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்
போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து
வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம்
செய்தவர் போன்றாவார்கள். இமாம் ( உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்து
விட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து)
விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 929
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள்
மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது
தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு
(நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல்
(பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள் ளதைத் தொழுகிறார். பிறகு
இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில்
அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும்
பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.
இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 883
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று
உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து
தொழாமல் அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர்
தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை’ என்றார்.
“எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 1585
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 1597
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 1602


எண்ணெய் பற்றாக்குறைக்கு காரணம் இந்தியா மற்றும் சீனா தான்: ஒபாமா
உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை அதிகரிக்க முக்கிய காரணம் இந்தியா, பிரேசில் மற்றும் சீனா தான் என்கிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.இது குறித்து ஒபாமா கூறியதாவது: எண்ணெய் சந்தை நிச்சயமற்றதாக உள்ளது. அதே நேரம் வல்லரசுகளாக வளரும் சில நாடுகளின் அதிக தேவை எண்ணெய்ப் பற்றாக்குறைக்கு வித்திடுகிறது.
குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் சீனாவில் பல மடங்கு அதிகரித்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவை தான் இன்றைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதே நேரம் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது. இப்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் சமாளிப்போம் என்றார்.
உலகில் அதிக அளவு பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே. குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட இந்த நாடுகள் தான் உலக எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கை பயன்படுத்தி வந்தன.இப்போது சீனாவும், இந்தியாவும் வல்லரசுகளாக வளரத் தொடங்கியுள்ளன. எனவே இங்கு வாகனப்பயன்பாடு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் தேவையும் அதிகரிப்பது இயல்பான ஒன்று தான்.