Pages

சனி, 14 மே, 2011

தமிழகத்தில் நடந்த அதிக வாக்குப்பதிவு,


தமிழகத்தில் நடந்த அதிக வாக்குப்பதிவு, முதல் முறை வாக்களிப்பவர்கள், விலைவாசி உயர்வு, மின்தடை என்று பல காரணங்களால், அ.தி.மு.க இந்த பெரு வெற்றியை பெற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் பலரும் கருணாநிதி குடும்ப ஆட்சி கொள்ளையை மட்டும்

வியாழன், 12 மே, 2011

யார் பயங்கரவாதி? அல் காய்தாவா, அமெரிக்காவா?


பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அச்செய்தியை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு அறிவித்த பராக் ஒபாமா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அநியாயமாகக் கொன்ற ஒரு பயங்கரமான தீவிரவாதியை ஒழித்து நீதியை நிலைநாட்டி விட்டதாகவும், இத்தோடு நில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது இதுவரை நிலைநாட்டியதைக் கடந்து இன்னமும் நிலைநாட்டப்படுவதற்கு இன்னமும் நீதியை அமெரிக்கா ஸ்டாக் வைத்துள்ளது என்பதே அந்த அறிவிப்பின் உள்ளார்ந்த அர்த்தம்.

புதன், 11 மே, 2011

மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில்


புதுடெல்லி: May 10, பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடம் கொடுக்கவேண்டும்.

இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகரா என்ற அமைப்பிடம் கொடுக்க வேண்டும்.

இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம்.

என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பிற்குத் தான் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், நிலத்தைப் பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை.

ஆனால், யாருமே கேட்காத நிவாரணத்தைக் கொடுத்துள்ளது அலகாபாத் உயர் நீதிமன்றம். எவரும் கோராத வகையில், நிலத்தைப் பிரிக்குமாறு தீர்ப்பளித்திருப்பது வினோதமாகவும் உள்ளது, விந்தையாகவும் உள்ளது.

இது மிகவும் புதுமையான, புதிரான தீர்ப்பு. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே அயோத்தியில் தொடர வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 60 ஆண்டுகளாக தொடரும் அயோத்தி பாப்ரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

திங்கள், 9 மே, 2011

பாபர் மஸ்ஜித் வழக்கு : என்னது மூனா பிரிக்கனுமா?????? அலஹாபாத்தின் டூபாகூர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை – சுப்ரிம் கோர்ட் அதிரடி



பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கள் கிழமை காலை விசாரனைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரிம் கோர்ட்டி நீதிபதிகள் ”முதல் கட்டமாக அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை” விதித்துள்ளனர்

பாபர் மஸ்ஜித் வழக்கு : என்னது மூனா பிரிக்கனுமா?????? அலஹாபாத்தின் டூபாகூர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை – சுப்ரிம் கோர்ட் அதிரடி



பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கள் கிழமை காலை விசாரனைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரிம் கோர்ட்டி நீதிபதிகள் ”முதல் கட்டமாக அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை” விதித்துள்ளனர்.
மேலும் அலஹாபத் உயர் நீதிமன்றத்தின் திர்ப்பு முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாகவும் அதாவது வழக்கமாக தீர்ப்பளிக்கும் நீதிக்கு எதிரானதாகவும் மிகவும் ஆச்சிரிமானதாகவும் (Strange and surprising) உள்ளது என கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.
இவ்வாறு பிரித்து தீர்ப்ளித்துள்ளது, இதே போன்று பல தொடர்ச்சியான வழக்குகள் வர வாய்ப்பாக அமைந்து விட்டது எனவும் சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதாவது இந்த தீர்ப்பை பார்த்த பிறகு
”இந்த இடத்த தொண்டி பாருங்க அதுல என்னோட முப்பாட்டனோட முப்பாட்டன் உடைய கை தடி கிடக்கும் அதுனால இது என்னாடோ இடம்,
இந்த இடத்துல தான் நான் பிறந்தேன் அதுனால இது என்னோட இடம் ,
எங்க ”கடல காங்கேயன் ” சாமி மைனரு அவருக்கு பதிலான நான் வழக்கு போட்றேன் அந்த சாமி இங்க தான் தூங்கினாரு அதுனால இந்த எடம் என்னோடதுன்னு”
ஆளுக்குள் ஆள் வழக்கு பொட்ருவாங்களே ! இப்படி வழக்கு போட்டா அப்புறம் கோர்ட் என்ன கதியாவது ன்னு சுப்ரிம் கோர்ட் சொல்லுது…
tahnks for: tntnj.net

ஞாயிறு, 8 மே, 2011

அபுதாபியில் நடைபெற்ற இரத்த தான முகாம்


எல்லாம் வல்ல இறைவனின் அருளாள் அபுதாபியில்
கடந்த 29/04/2011 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அபுதாபி ஷேக்கலீபா மெடிக்கல் சிட்டி இரத்தவங்கியும் இணைந்து மெகா இரத்த தான முகாம் ஒன்றை நடத்தியது. அல்ஹ‌ம்துலில்லாஹ்.
மாலை 3 மணிமுதல் இரவு 8 மணிவரை இரத்த தானம் செய்ய மருத்துவ குழுவினர் நேரம் ஒதுக்கியிருந்தனர். அதிகமான சகோதரர்கள் வருகைத் தந்ததனைத் தொடர்ந்து இரவு 8.45 மணி வரை முகாம் நடைபெற்றது. கிடைத்த நேரத்தில் 86 சகோதரர்கள் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது.
இரத்த தான முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அபுதாபி மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர். வாகன வசதி மற்றும் இரத்த தானம் செய்ய வந்த சகோதரர்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற பணிகளை தொண்டரணியினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்..

வியாழன், 5 மே, 2011

உஸாமா பின் லேடன் - ஒரு நினைவுக் குறிப்பு



ஸாமாவின் மரணம் இன்று பல கேள்விகளை எல்லோரிடத்திலும் எழுப்பியுள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர்கள் உலகை பார்த்து விழித்தது இது இரண்டாவது முறை.

புதன், 4 மே, 2011

ஸலாஹூதீன் ஐயூபி

அநியாயக்கார சிலுவை வீரர்களை ஓட ஓட துரத்திய மாபெரும் வீரன். எதிரிகள் இவரை கண்டாலே நடுங்குவர். பலஸ்தீனை மஸ்ஜதிதுல் அக்ஸாவை மீட்ட மாபெரும் வீரன்.இணையத்தில் இவரை பிழையாக விமர்சிக்கும் நிரைய கார்டுன்கள் உள்ளன.பாருங்கள் இவரின் யுத்த தந்திரத்தை

செவ்வாய், 3 மே, 2011

மொபைல் போன் வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்ச்சி


 மொபைல் போன் வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் மக்களிடையே பரவவில்லை. முன்பு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் பரவத் தொடங்கிய போது ஏற்பட்ட வைரஸ் சூழ்நிலை, மொபைல் போன்களுக்குத் தற்போது ஏற்பட்டு வருகிறது. இனி மக்கள் இதனை உணர்ந்து தற்காப்பு வழிகளை மேற்கொள்வார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். முன்பு

Osama Bin Laden is Dead?

எத்தனை தடவை ஒரு மனிதனை இறந்து விட்டார் என்பார்கள்?

அல் கைதா - அமெரிக்க பித்தலாட்டம் வெளுக்கிறுது.



லகில் அல் கைதா என்ற அமைப்பு இல்லை. அது அமெரிக்க அரசும், ஊடகங்களும் சேர்ந்து உருவாக்கிய கட்டுக்கதை. பயங்கரவாத தாக்குதல்கள் யாவும், அல் கைதா பெயரில் நடமாடும் சி.ஐ.ஏ. உளவாளிகளின் சதி வேலைஇவற்றை ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த ஆவணப்படம். 
பின் லாடன் சார்ந்த போராட்ட ஜிஹாதிய இயக்கம் இயங்குவது உண்மை. அவர்கள் தம்மை சர்வதேச ஜிஹாதுடன்  இணைப்பினை ஏற்படுத்திக் கொண்டவர்களாக தமது வேலைத்திட்டங்களை முன்னெப்பதாகவே முஸ்லிம் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. மாறாக அமெரிக்கா சொல்லும் பம்மாத்தின் அடிப்படையில் அல்ல.


அல் கைதா இயக்கம் போலி மாயை பாகம் 1 



02

திங்கள், 2 மே, 2011

கடாபியின் மகனும் பேரப்பிள்ளையும் குண்டு வீச்சில் கொலை



டென்மார்க் 01.05.2011 ஞாயிறு மதியம்
நேற்று நேட்டோ படைகள் கடாபியின் மாளிகை மீது மூன்று ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தின. இதில் கடாபியின் மகனான 29 வயதுடைய செய்ப் அல் அராப் கடாபி மரணமடைந்தார். இவரோடு கடாபியின் பேரப்பிள்ளை ஒன்றும் மரணித்துள்ளது. இந்தத் தாக்குதல் நடைபெற்றபோது கடாபியும் நிலத்தடி அறையில் இருந்துள்ளார். ஆனால் அவருக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேற்படி தகவலை லிபிய அரசின் தகவல் தொடர்பாளர் மூஸா இப்ரகீமும் ஊர்ஜிதம் செய்தார். இதேவேளை தான் சமாதானத்திற்கு தயார் என்றும், பேச்சுக்களை நடாத்த தயார் என்றும் கடாபி அவசர அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் நேட்டோ இதை அடியோடு நிராகரித்துள்ளது. 1973ம் ஆண்டு ஐ.நாவின் சட்டத்தை மீறிய குற்றச் செயலை செய்த கடாபியுடன் பேசுவதற்கு இனி எதுவும் நேட்டோவுக்கு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது, போர் தொடர்கிறது.

ஞாயிறு, 1 மே, 2011

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்


அருள் மறை திருக் குரானில், மனிதனை ஒரு சிறந்த அழகிய படைப்பாக படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.


திடமாக, மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல் குரான் 95:4).

முதல் மனிதனை இறைவன் களிமண்ணினால் வடிவமைத்து பின் அவ்வடிவத்திற்கு உயிரை அவன் தன் ஆவியிலிருந்து ஊதினான். இதனை அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்.