Pages

வியாழன், 5 மே, 2011

உஸாமா பின் லேடன் - ஒரு நினைவுக் குறிப்புஸாமாவின் மரணம் இன்று பல கேள்விகளை எல்லோரிடத்திலும் எழுப்பியுள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர்கள் உலகை பார்த்து விழித்தது இது இரண்டாவது முறை.


ஜோர்ஜ் புஸ் நியூயோர்க் கட்டடங்களை தகர்த்து விட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என அமெரிக்க புதிய உலக ஒழுங்கை மாற்றி வாசித்தது முதலாவது அறிவிப்பு


பராக் ஒபாமா ஒஸாமா பின் லாடனை கொன்றொழித்ததாக உலக மக்களிற்கு செய்தி வெளியிட்டது இரண்டாவது அறிவிப்புஇந்த இரண்டுமே அவர்களால் திட்டமிடப்பட்டு நேர காலம் குறிக்கப்ட்டு தமது அரசை அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்த நாடுகளின் மேல் ஆக்கிரமிப்பை நடாத்த அல்லது நடத்திய ஆக்கிரமிப்பில் இருந்து கழன்டு கொள்ள மேற்கொண்ட நாடகமே.

உலகத்தில் மகா பொய்யர்கள் யூதர்கள். யூதர்களுடன் உறவாடி உறவாடி இப்போது அமெரிக்கர்களும் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

அன்று ஹொலிவூட்டே மக்களை மடையர்களாக ஏமாற்றியது. அதை இப்போது அமெரிக்க அரசு செய்து காட்டியுள்ளது. 

அமெரி்க்காவை பொறுத்தவரை. அதன் சர்வதேச அரசியலை பொறுத்தவரை அர்னால்ட் ஸ்வாசிநேகர் (கொமாண்டா) சில்வஸ்டர் ஸ்டோலின் (ரம்போ) போன்ற மோரல் ஹீரோவே ஒஸாமா பின் லேடன் எனும் மாயை.

சிறுவர்கள் பாசையில் சொல்வதென்றால் MISSION I.G.I. போன்ற ஒரு அமெரிக்க தயாரிப்பே அல் காயிதா பூதம். அமெரிக்காவிற்கு வேண்டிய நேரம் மீடியாக்கள் மூலம் ஊதினால் பூதம் கிளம்பும். மீண்டும் மீடியாக்கள் மூலம் ஊதினால் பூதம் மறைந்து விடும்.

இப்போது ஒஸாமைவை கொலை செய்த தாக்குதல் படத்தை ஒஸ்காரிற்கு விருதிற்கு அனுப்பினாலும் வியப்பில்லை.

ஒஸாமா இஸ்லாமாபாத்தில் அதுவும் பாகிஸ்தானிய இராணுவ அகடமிக்கு சமீபமாக. ஒரு சில மெய்பாதுகாவலர்களுடன் . தாக்குகிறது அமெரிக்கா. கொல்கிறது அமெரிக்கா. கடலில் வீசுகிறது அமெரிக்கா. ஒஸாமா படத்தின் முடிவிற்கு சுபம் கூறுகிறார் ஒபாமா.

ஏன் இவ்வளவு அவசரம் அமெரிக்காவிற்கு. அதாவது பென்டகனிற்கு. நிச்சயமாக இவர்கள் வேறு ஒரு திட்டத்துடன்தான் ஒஸாமா கதையை அவசர அவசரமாக முடித்துள்ளார்கள்.

இவ்வாறு தான் இலங்கையில் பிரபாகரன் கதையையும் அவசர அவசரமாக முடித்தார்கள். ஆனால் அது நிஜமான திரைக்கதை. உண்மையிலேயே கொன்றார்கள்.

உஸாமா பின் லாதினுடைய மரணத்தை இன்று இரு தரப்பும் வியாபாரமாக்கப் பார்க்கிறது. இறந்த மனிதனை உயிருடன் இருப்பதாக நீண்ட காலமாகவே அமெரிக்கா நம்ப வைத்துள்ளது என்பதே இப்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கூறக்கூடியதாக உள்ளது.

பெனாசிர் பூட்டோ தனக்கு முன்னால் ஐ.எஸ்.ஐ. இயக்குனர் அவர் இறந்து விட்டதாக கூறிய பேட்டி நாம் கண்டிருப்போம். முன்னாள் பாகிஸ்தானிய இராணுவ தளபதி அஸ்லம் பெக்கும் இந்த கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 

இறந்த மனிதனை அமெரிக்கா இவ்வளவு காலமும் இருப்பதாக கூறி தனது பொருளாதார சுரண்டலிற்கும் இராணுவ ஆக்கிமிப்பிற்கும் தனது சர்வதேச ஏகாதிபத்திய போக்கிற்கும் ஏற்றவாறு விளையாடியது.

இப்போது போராளிகள் அவர் இருப்பதாக அறிவித்து தமது போராட்டத்தின் இருப்பை தக்கவைக்கப் பார்க்கிறார்கள்.

பிரபாகரன் இறந்த போதும் அவர் இறக்கவில்லை என இன்றும் புலம்பெயர் தேசங்களில் பிழைப்பு நடாத்தும் புலி பினாமிகள் இதற்கு நல்ல உதாரணம்.

போராட்டம் என்றுமே தனி மனிதரில் தங்கியிருப்பதில்லை. மாறாக தலைவர்கள் தான் போராட்டத்தில் தங்கியிருக்கின்றனர். இதுவே உண்மை.

உஸாமா பின் லாதின்
இந்த மனிதர் ஆப்கானிய ஜிஹாதின் போது தான் அறிமுகமானார். ஆப்கானில் பல போராட்டக் குழுக்கள் போராடிய பொழுதுகளில் மத்திய கிழக்கில் இருந்தும் வட ஆபிரிக்க பிரதேசங்களில் இருந்தும் வந்த போராளிகளிற்கு தலைமை ஏற்றவர்கள் இருவர். ஒருவர் அப்துல்லாஹ் ஆஸம். பின்னையவர் உஸாமா.

இருவரும் எதிர் மறை கருத்தியல்கள் கொண்டவர்கள். ஆஸம் ஏனைய போராட்ட குழுக்களுடன் கொண்டிருந்த உறவை உஸாமா ஒரு போதும் பேணவில்லை. மாறக தனது அதீத பண வலிமையினால் தனியான குழுவாக இயங்கினார். (சில காலங்கள் சேர்ந்து இயங்கியும் உள்ளார்)

 அன்றைய ஆப்கானிய யுத்தத்தில் போராளிகளின் உள்ளங்களில் ஒரு ஆன்மீக் புத்துணர்ச்சியை ஏற்படுத்தவல்ல திறன் உஸாமாவிடம் காணப்பட்டது. ஆப்கானிய போராட்டத்தை மண் விடுதலைக்கான போராட்டம் எனும் தளத்தில் இருந்து இஸ்லாமிய ஆட்சிக்கான போராட்டம் எனும் தடத்திற்கு மாற்றியமைத்தவர் இவர்.

சோவியத்துடனான ஜிஹாதின் வெற்றிக்குப் பின் அப்துல்லாஹ் ஆஸமுடன் இணைந்த இயங்கிய முஜாஹித்கள் பொஸ்னிய செச்னியா என ஜிஹாத் களங்களை நாடி சென்ற போது இவரால் அவ்வாறான செல் நெறியில் இயங்க முடியவில்லை.

தெரிவுகள் எப்போதும் சரியாக இருக்க வேண்டும். சரியாக இருந்தால் மட்டும் போதாது. சரியாண தருணத்தில் சரியான தெரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதே வெற்றி காணலாம்.

ஆனால் உஸாமாவின் தெரிவு தலிபானாக இருந்தது. அமெரிக்க ஆசீர்வாதத்துடன் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. யால் வளர்க்கப்பட்ட இயக்கம் அது. ஏனைய முஜாஹிதீன் அமைப்புக்களை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த டொலர் தேசம் உருவாக்கிய அமைப்பு அது. 

ஜலாலுத்தீன் ஹக்கானியுடன் உஸாமா இணைந்திருப்பாரானால் நிலைமையே வேறுவிதமாக மாறியிருக்கும். இஸ்லாமிய ஆட்சியின் விருட்சம் ஆப்கானில் வேர்விட்டிருக்கும்.

ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ரப்பாணியுடனும் அப்துர் ரஸீல் ஸய்யாபுடனும் உமர் முல்லாவுடனும் தான் அவரது நெருக்கமான தொடர்புகளை பேண முற்பட்டார்.

என்று உஸாமா தலிபானுடன் இணைந்த போக்கை மேற்கொண்டாரோ அன்று முதல் அவரிற்கும் பாகிஸ்தானிய உளவு அமைபிற்கும் கடைசிவரை அடிமட்டத் தொடர்பு இருக்கத்தான் செய்தது.

அபு முஸ்ஸப்பின் மறைவுடன் ஈராக்கின் பிடியும் அவரை விட்டு விலகியது. செச்னிய முஜாஹிதாவில் அவர் பங்கு பெரிதாக இல்லை. பொஸ்னிய சண்டையிலும் அதே நிலை.
ஆனால் மொராக்கோ டுனீஸியா சூடான் சோமாலியா சவிதியின் ஜி்த்தா யெமன் போன்ற இடங்களில் அதீத செல்வாக்கு பெற்று விளங்கியவர் இவர். சில முஜாஹிதீன் அமைப்புக்கள் இவரை ரஹீமத்துல்லாஹ் என அழைக்கும் அளவிற்கு இவரது தாக்கம் அவர்கள் மேல் இருந்தது வியக்கத்தக்க விடயம்.

இறுதி வரை இஸ்லாத்திற்காக போராடிய ஒரு மனிதர். உலகளாவிய ஜிஹாதிய அமைப்புக்களின் தொடர்பு மையமாக செயற்பட்டவர். ஒரு புள்ளியில் அமெரிக்க ஸியோனிஸ எதிர்ப்பு சக்திகளை ஒன்று குவித்தவர். 

அல் அக்ஸாவின் விடுதலைவரை போராட வேண்டும் என கனவு கண்டவர். இவர் தனக்கு வழிகாட்டியாக இருவரை அடிக்கடி நினைவு கூறுவார். ஒருவர் சேஹ் அப்துர் ரஹ்மான் (நியுயொர்க் குண்டு வெடிப்பின் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்) அடுத்தவர் எகிப்திய அய்மன் ஜவாகிரி. 

துல்லியமாகப் பார்க்கப் போனால் இஹ்வானிய அடிப்படையில் உருவான சிந்தனைகளை சுமந்த மனிதர். ஒன்றினைக்கப்பட்ட இஸ்லாமிய கிலாபாவாக நான்கு இடங்களை உருவாக்க கனவு கண்டவர்.

சவுதியை மையமாகக் கொண்ட யெமன் குவைத் பஹ்ரைன் கட்டார் தழுவிய கிலாபா. எகிப்தை மையமாகக் கொண்ட லிபியா மொராக்கோ அல்ஜீரியா டுனீஜியா சோமாலியா சூடான் போன்ற நாடுகளை தழுவிய கிலாபா. சிரியா ஜோர்தான் பலஸ்தீன் இணைக்கப்பட்ட கிலாபா. ஆப்கானிஸ்தான் தஜிகிஸ்தான் பாகிஸ்தான் போன்றன இணைக்கப்பட்ட இஸ்லாமிய கிலாபா.

முதல் மூன்று கிலாபாவும் கடினமான சித்தாந்த நடைமுறையாக இருந்ததால் பாகிஸ்தானை மையப்படுத்திய இஸ்லாமிய இராஜ்ஜியத்திற்கான அவரது நகர்வே இறுதியில் அவரிற்கு எதிராக ஐ.ஏஸ்.ஐ அமெரிக்காவுடன் கூட்டுச்சேர ஏதுவான காரணியாக மாறியது.

ஒரு முஸ்லிம் மூன்று அடிப்படை காரணிகளினால் ஒரு குப்ரிய மண்ணில் வாழலாம்.
1) இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க அந்த மண்ணில் ஜிஹாத் புரிதல்
2) ஜிஹாதை கட்டமைப்பதற்கான பாரிய தயாரிப்பிற்காக அங்கு தரித்திருத்தல்
3) எதுவும் செய்ய முடியாத நிலையில் ஹிஜ்ராவிற்கு தயாராக இருத்தல்.

இந்த மூன்றுமே உஸாமா பின் லாதினுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து முடிந்தவை. அவர் உயிருடன் இருந்தாலும் சரி இல்லை முன்னதாகவே மரணித்து இருந்தாலும் சரி அவர் ஒரு உண்மையான உன்னதமான முஜாஹித். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது தெரிவுகள் அவர் பின் பற்றிய தலைமைகள் அவரது தனியான சிந்தனை என்பன அவரை தோற்கடித்து விட்டது. உஸாமா பின் லாதின் ஒரு அஜமியாக (அரபி அல்லாத) இருந்தால் இவ்வளவு அங்கீகாரமும் ஆகர்சமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.


இவரது மரணத்தில் சந்தோசமடைபவர்கள் அமெரிக்கர்கள் மட்டுமல்ல பிரித்தானியாவின் இன்னொரு வார்ப்பான ஹிஸ்புத் தஹ்ரீருமே. ஸலபிகளும் இவரது மரணத்தை வரவேற்கவே செய்வர்.
-------------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்புஉஸாமா பற்றிய இந்த விடயத்தை எழுதுவதன் நோக்கம் அவரை குறை கூற அல்ல. மாறாக அவரால் முன்வைக்கப்பட்ட போராட்ட ஒழுங்கியலில் காணப்பட்ட சில முரண்களையும் முன்வைக்கின்றோம். அவரது நிறையை மட்டும் கூறி பெருமிதமடைவதில் எந்த அர்த்தமும் இல்லை.


இந்த கட்டுரையை வாசிக்கும் போது உஸாமா உலகலாவிய ஜிஹாதிய அமைப்பினராலும் தலிபான்களாலும் கைவிடப்பட்ட நிலையிலேயே மரணித்தார் எனும் கருத்து தோன்ற வாய்ப்புண்டு. அவ்வாறல்ல. அவரின் வார்த்தைகளிற்காக உயிர் தியாகம் செய்யவும் தயாரான எத்தனையோ அமைப்புக்கள் உலகில் உண்டு. தலிபான்களிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சண்டையின் தோற்றுவாயே உஸாமா பின் லாடனை உயிருடன் கையளி்க்குமாறு அமெரிக்கா கோரியதும் அதை தலிபான்கள் நிராகரித்ததுமாகும். உஸாமாவையும் அவரை சார்ந்தோரையும் பாதுகாக்க தலிபான்கள் கடைசிவரை உறுதியோடு நின்றார்கள். இப்போதும் நிற்கிறார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை மிக மிக அதிகம். உஸாமா வேறு தலிபான் வேறல்ல. இதுவே உண்மை. இதை வாசிப்பவர்கள் உஸாமா தோற்றுவிட்டார். அவரை ஏணைய போராட்ட அமைப்பினர் கை கழுவி விட்டனர் எனும் கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டாம் என கைபர் தளம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

thanls for:கைபர் தளத்திற்காக - அபூ ஸய்யாப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது