Pages

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.பகுதி.2


இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.பகுதி.2
 ஓரிக் கொள்கை மறுப்பு, விபச்சாரம், அளவு மோசடி,துரோகம், ஓரினச் சேர்க்கை, லஞ்சம், நீதியின்மை, தீவிரவாதம்,அமானித மோசடி, கொலை, கொள்ளை, வரதட்சனை, பொய்,பித்தலாட்டம் இதுப் போன்ற ஏராளமான செயல்களை மனிதநேயத்திற்கும் மனிதனுக்கும் இந்த சமுதாயம் செய்துவருகிறது.


முந்தைய வரலாற்றில் படிப்பினை
ஷுஐப் (அலை)

அளவில் மோசடி செய்தவர்கள்
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ 7:85
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபைஅனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்!உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறுயாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்றுவந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும்நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக்குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கைகொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று அவர்கூறினார்.
அல்குர்ஆன் : 7: 85

பூகம்பம் தாக்கியது
فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ (91) الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانُوا هُمُ الْخَاسِرِينَ (7:92)
உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமதுவீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோர்(அதற்கு முன்) அங்கே வசிக்காதவர்களைப் போலானார்கள்.ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோரே இழப்பைஅடைந்தோரானார்கள்.
அல்குர்ஆன் 9:91,92

லூத் (அலை)
ஓரினச் சேர்க்கை ஈடுபட்டார்கள்
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ (80) إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ (7:81)
"நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம்செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.) இவர்களை உங்கள் ஊரை விட்டுவெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்''என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.
அல்குர்ஆன் 7: 81,82
மழையால் அழிக்கப்பட்டன
فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ (82) مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ (11:83)
நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின்மீது கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.  (அவை) உமது இறைவனிடம்அடையாளமிடப்பட்டது. அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத்தொலைவில் இல்லை.
அல்குர்ஆன் 11:82,83

ஸமூது (அலை)
ஆணவம் கொண்டவர்கள்
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ (6) إِرَمَ ذَاتِ الْعِمَادِ (7) الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ (8) وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ (9) وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ (10) الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ (11) فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ (12) فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ (89:13)
ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமதுஇறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையாஉலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூதுசமுதாயத் தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படிஆக்கினான்?)  அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள். எனவே உமது இறைவன்வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
அல்குர்ஆன் 89: 6,13
மிக கடுமையான புயல்
فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ (15) فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَى وَهُمْ لَا يُنْصَرُونَ (41:16)
ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம்கொண்டனர். "எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக்கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விடவலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள்நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.  எனவே இவ்வுலகவாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச்செய்வதற்காக கெட்ட நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றைஅனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும்இழிவுபடுத்தக் கூடியது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
அல்குர்ஆன் 41:15,16.இன்சாஹ் அல்லாஹ். தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது