Pages

சனி, 2 ஏப்ரல், 2011

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்


 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
 குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்
 
 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66


இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை  (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.

1)      கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2)      வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
3)      கலப்பற்ற பால்
4)      அருந்துபவர்களுக்கு இனிமை
5)      தாராளமாக புகட்டுகிறோம்
  
மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா? 
1.  கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2.  வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.


பசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்
 பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன அவைகளாவன
  1. RETICULUM (ரெடிகுழம்)
  2. RUMEN,   (ரூமென்)
  3. OMASUM,  (ஓமசம்)
  4. ABOMASUM (அபோமசம்)
இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!.


பசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்
பசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது அந்த விழுங்கிய உணவு நேரடியாக ரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.
சேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களானRUMEN, (ரூமென்) OMASUM,  (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.

அமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.

பசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை
பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியான ரூமென் என்ற அறைக்குள் தள்ளப்படுகிறது இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதியை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.

பிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்தஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.

செரிக்கப்பட்ட உணவு இரத்தித்தில் எவ்வாறு கலக்கிறது!இன்சஹ் அல்லாஹ் அடுத்த பதிப்பில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது