Pages

திங்கள், 2 மே, 2011

கடாபியின் மகனும் பேரப்பிள்ளையும் குண்டு வீச்சில் கொலை



டென்மார்க் 01.05.2011 ஞாயிறு மதியம்
நேற்று நேட்டோ படைகள் கடாபியின் மாளிகை மீது மூன்று ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தின. இதில் கடாபியின் மகனான 29 வயதுடைய செய்ப் அல் அராப் கடாபி மரணமடைந்தார். இவரோடு கடாபியின் பேரப்பிள்ளை ஒன்றும் மரணித்துள்ளது. இந்தத் தாக்குதல் நடைபெற்றபோது கடாபியும் நிலத்தடி அறையில் இருந்துள்ளார். ஆனால் அவருக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேற்படி தகவலை லிபிய அரசின் தகவல் தொடர்பாளர் மூஸா இப்ரகீமும் ஊர்ஜிதம் செய்தார். இதேவேளை தான் சமாதானத்திற்கு தயார் என்றும், பேச்சுக்களை நடாத்த தயார் என்றும் கடாபி அவசர அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் நேட்டோ இதை அடியோடு நிராகரித்துள்ளது. 1973ம் ஆண்டு ஐ.நாவின் சட்டத்தை மீறிய குற்றச் செயலை செய்த கடாபியுடன் பேசுவதற்கு இனி எதுவும் நேட்டோவுக்கு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது, போர் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது