ஒரு தேசம் பொருளாதாரத்தில் மட்டும் வளர்ந்தால் போதுமா ? அந்த நாட்டின் மக்களின் உடல்நலமும், மனநலமும் பேணப்படல் வேண்டாமா? அந்த மக்களைத் தாங்கி நிற்கும் இயற்கையின் வளம் காக்கப்பட வேண்டாமா? கடந்த ஆண்டு மட்டும் சீனாவில் இரண்டாயிரம் தொழிற்சாலைகள் சுகாதாரக் கோடு மிக்கது, தொழிலாளர் உடல்நலக் கேடு தருகிறது எனக் கூறி மூடப்பட்டது. இருந்தாலும் உலகில் சகல உற்பத்தியில் முன்னணியில் போகும் வேகப் போட்டியில், சீனாவின் அனைத்து நகரங்களும் அமில மழையால் நனைந்துக் கிடக்கிறது. Green houses வாயுக்களை வெளியே தள்ளுவதில் அமெரிக்காவையும் முந்திக் கொண்டு சென்றுள்ளது சீனம். நம் இந்தியா மட்டும் என்ன இயற்கை இரட்சக தேசமா? நிச்சயமாக இல்லை ! அல் ஜழீரா தொலைக்காட்ச்சியில் வெளியான இந்நிகழ்ச்சில் இயற்கையை சீரழித்து பொருளாதார வளர்ச்சியடைய சீன பெரும்நாடு எவ்வளவு கேவலங்களை செய்துள்ளது என்பதை விரிவாக ஆராய்கிறது.                       நன்றி.tamilcharam.