Pages

செவ்வாய், 15 மார்ச், 2011


எண்ணெய் பற்றாக்குறைக்கு காரணம் இந்தியா மற்றும் சீனா தான்: ஒபாமா
உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை அதிகரிக்க முக்கிய காரணம் இந்தியா, பிரேசில் மற்றும் சீனா தான் என்கிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.இது குறித்து ஒபாமா கூறியதாவது: எண்ணெய் சந்தை நிச்சயமற்றதாக உள்ளது. அதே நேரம் வல்லரசுகளாக வளரும் சில நாடுகளின் அதிக தேவை எண்ணெய்ப் பற்றாக்குறைக்கு வித்திடுகிறது.
குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் சீனாவில் பல மடங்கு அதிகரித்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவை தான் இன்றைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதே நேரம் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது. இப்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் சமாளிப்போம் என்றார்.
உலகில் அதிக அளவு பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே. குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட இந்த நாடுகள் தான் உலக எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கை பயன்படுத்தி வந்தன.இப்போது சீனாவும், இந்தியாவும் வல்லரசுகளாக வளரத் தொடங்கியுள்ளன. எனவே இங்கு வாகனப்பயன்பாடு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் தேவையும் அதிகரிப்பது இயல்பான ஒன்று தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது