Pages

செவ்வாய், 15 மார்ச், 2011



அச்செடுக்க
கூட்டணி விவகாரத்தில் கருணாநிதிக்கு நெருக்கடி அளித்து 63 தொகுதிகளை திமுக விடமிருந்து பெற்றது போல,காங்கிரஸ் மேற்கு வங்கத்தில்  மம்தா பானர்ஜியிடம் தன் ஆதிக்கத்தை 'காண்பிக்க' முடியவில்லையாம்.

"நான் கருணாநிதி இல்லை; என் கட்சி தி.மு.க.,வும் இல்லை. தி.மு.க.,வை மிரட்டியது போல, எங்களிடம் காங்கிரஸ் வாலாட்ட முடியாது' என்று சொல்கிறாராம் மம்தா. காங்கிரசில் மம்தா கட்சி இணைய வேண்டும் என்று சில காங்., தலைவர்கள் சொன்னதற்கு, என்றைக்கு ராகுல் பிரதமர் பதவியில் அமர்கிறாரோ, அன்று எங்கள் கட்சி காங்கிரசோடு ஐக்கியமாகும் என்று கிண்டலடித்துள்ளாராம் மம்தா.

மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுடன் மேற்கு வங்க தொகுதி பங்கீடு தான்.மேற்கு வங்க சட்டசபையில் 294 தொகுதிகள் உள்ளன. இதில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 90 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருக்கிறது.ஆனால், மம்தாவோ 58 தான் தர முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது போதாதென்று, காங்கிரசை, இன்னொரு பிரச்னையிலும் சிக்க வைத்துள்ளார் மம்தா.அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. அங்கு எதிர்க்கட்சிகள் பலம் குறைந்ததாக இருப்பதால், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மண்ணைப் போட திட்டமிட்டுள்ளார் மம்தா. திரிணமுல் கட்சி, அசாமிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் காங்கிரசின் இடங்களை குறைக்க, மம்தாவின் திட்டம் இது.

வெற்றி பெறுகிற மாநிலத்திலும், எதற்கு தோல்வி அடைய வேண்டும் என்று தற்போது மேற்கு வங்க தொகுதிகளை குறைத்துக் கொள்ளவும் காங்கிரஸ் இறங்கி வந்துவிட்டது. அசாமில் போட்டியிடாதீர்கள். எங்களுக்கு மேற்கு வங்கத்தில் குறைவான இடங்களை கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால், வெற்றி பெறும் தொகுதிகளை கொடுங்கள் என்று மம்தாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது