Pages

ஞாயிறு, 27 மார்ச், 2011

ஜப்பானின் புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு 10 மில்லியன் மடங்கு அதிகரிப்பு!



ஜப்பானின் இரண்டாவது மிகப்பெரும் அணு உலையான புகுஷிமா டாயிச்சி சக்தி மையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நீரில் மீண்டும்  கதிர்வீச்சு (Radiation) அளவு பரிசோதனை செய்யப்பட்டதில் முன்னர் இருந்ததை விட சுமார் 10 மில்லியன் மடங்கு கதிர்வீச்சு தாக்கம் செலுத்தியுள்ளதாக இன்று ஜப்பான் அறிவித்துள்ளது.இச்சோதனை நிலையம் ஒவ்வொரு 53 நிமிடத்திற்கும் ஒரு முறை, முன்னர் இருப்பதிலிருந்து அரைமடங்கு தனது குளிர்நிலையை இழந்துவருவதால், கதிர்வீச்சு தாக்கம் இவ்வாறு அதிகரித்துள்ளது. 
கதிர்வீச்சு தாக்கம் அதிகரித்துள்ளது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் இதனால் விழையப்போகும் எதிர்மறையான உடல் ஆரோக்கிய நிலைமைகள் பற்றி எம்மால் எதிர்வு கூற முடியாதுள்ளது என ஜப்பானின், கைத்தொழில் மற்றும் அணி ஆராய்ச்சி பாதுகாப்பு முகவர் நிலையத்தின் அதிகாரி ஹிடேஹிகோ நிஷ்ஹியாமா தெரிவித்துள்ளார்.இதேவேளை அதிகரித்துவரும் கதிர்வீச்சு தாக்கம் காரணமாக ஜப்பானின் கடல் மட்டத்தில் கதிரியக்க தாக்கம் சாதாரண நிலைமையை விட 1,850 மடங்கு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது