Pages

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

அல் ஹதீஸ்


    பெரும் பாவங்கள்
    பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ
    
    பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது