Pages

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

பேனையைத் திருடிய ஜனாதிபதி! (காணொளி, பட இணைப்பு)




செக் குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் சிலி நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது சம்பிரதாயபூர்வமான ஒரு பேனையை திருடுவது போன்ற விடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் பாவிக்கும் பேனையை செக் ஜனாதிபதி உன்னிப்பாக அவதானித்து,பின் அந்தப் பேனையை கீழே வைத்ததும் அதை எடுத்து தனது பொக்கட்டில் போட்டுக் கொள்வது போன்று இந்தக் காட்சி அமைந்துள்ளது. இணையங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சியை இரு தினங்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.
இராஜதந்திர நடைமுறைகளின் பிரகாரம் இந்தப் பேனையை ஒரு நினைவுச் சின்னமாக செக் ஜனாதிபதி எடுத்துக் கொள்ள முடியும். இருந்தாலும் இணையப் பாவணையாளர்கள் இதை ஒரு திருட்டாகவே முத்திரை குத்தியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகையொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செக் குடியரசின் தலைநகரில் இவ்வாறான நிகழ்வுகளின் போது வருகை தரும் தலைவர்கள் பலருக்கு இது போன்ற பல பேனைகள் நினைவுச் சின்னங்களாக வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் எமது ஜனாதிபதியும் அதை எடுத்துக் கொண்டதில் எந்தத் தப்பும் கிடையாது என்று செக் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது