Pages

சனி, 23 ஏப்ரல், 2011

இன்ஸ்பெக்ட்டர் குடும்பத்தை வெட்டிக் கொன்ற ஆறு கொலை அமைச்சரும் அவரும் அராஜாகங்களும்...






வீரபாண்டி ஆறுமுகம் இந்தப் பெயரைக் கேட்டாலே பத்து மாசக் குழந்தையும் "பால்குடி"மறக்கும்.


பெயருக்கு ஏற்றார் போல் உடற் தோற்றமும் தேவை இல்லாத ஆடம்பர வாழ்க்கையும் மந்திரியை உசுப்பி விட்டாலும்,இந்த தேர்தல் அவருக்கு சரியான பாடம் கற்ப்பிக்கும் என்று எதிர் பார்த்திருப்போம்.

என்பது வருட காலம் ஏழை மக்கள்கள் குடியிருந்த குடிசைகளை கொடூர அரக்கன்கள் மூலம் வீட்டை இடித்து தள்ளியது மட்டுமின்றி அப்பாவி ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்கட்டர் குடும்பத்தினர் ஆறு பேரையும் வெட்டி கொன்னு குவித்த அவரது உறவுகள் வெகு சீக்கிரமாக அழிந்து போவார்கள் என்பதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை.

பல கோடிகளுக்கு விலைப் பேசப்பட்டுள்ள அந்த ஏழைகளின் சொத்துக்களை மீட்டு கொடுக்க உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியாலும் அரசியல் சக்தியால் அத்தீர்ப்புகளை குப்பையில் கிடத்தியாளும்,அந்த ஏழை மக்கள்களின் கண்ணீரும் அந்த இன்ஸ்பெக்ட்டரின் குடும்பத்தின் நினைவுகளும்,கூடிய விரைவில் அமைச்சரின் குடும்பத்தை "கல்லறையை"நோக்கி இழுத்து செல்லும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை மக்கள்களின் பிறார்த்தனை.

இந்த நாட்டின் வளங்களை சுரண்டிக் கொண்டும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பை ஏற்படுத்தியும், ஏமாற்றியதை கையும் களவுமாக பிடித்தவுடன் சில நூறு கோடிகளை மட்டும் அபராதமாக கட்டி மத்திய அரசையும் இந்த நாட்டு மக்களையும் ஏமாற்றும் இது போன்ற அமைச்சர்களை இனம் கண்டு அவர்களுக்கு சரியானப் பாடம் புகுத்தப் பட்டிருக்கும் இந்த தேர்தலில்.

இருள் இன்னும் முழுமையாய் விலகாமல் பஞ்சத்தில் தவிக்கும் இந்த ஏழை மக்கள்களுக்கு சூரியன் தோன்றி என்ன செய்திடப் போகிறது...?

காடுகளை அழித்து கானும் இடமெல்லாம் புறா கூடுகளாக கட்டிடங்களை எழுப்பி பல கோடிகளை கை மற்றியது போதாதா?

மரங்கள் இருக்கும் இடத்தில்தான் மழை வரும். நீர் இருக்குமென தமிழனின் நீர்நிலையறிவு சொல்வதை இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். பறிபோனது விவசாய நிலங்கள் மட்டுமன்று. நமது தமிழிய மருத்துவம் சொன்ன முதன்மையான மூலிகைகளும் இனி நமக்குச் சொந்தமில்லை.

காரணம் அரசியல் வாதிகளின் ஆக்கிரமிப்பால் அத்தனை இடங்களும் ஃப்ளாட் போடப்பட்டு விட்டன,மிச்சம் இருந்தது இந்த ஏழைகளின் கூடுதான்,அதர்க்கும் இப்போ அழிவு வந்து விட்டதை எண்னும்போது அரசியல் ஒரு சாக்கடை என்பதே நிருபனம் ஆகிறது.

இந்த நிலை நீடித்தால் தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவில் மனிதர்கள் வாழ தகுதியற்றவர்களாக மாறி விடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது