Pages

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு!!



ஏப்ரல் 17, தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்தை தாண்டியதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் மேல் ஆசை கொள்ளாத பெண்களே இல்லை. திருமணம், விழா உள்பட எந்த விழாவாக இருந்தாலும் பெண்கள் கழுத்து நிறைய நகை அணிந்து வலம் வருவதைத்தான் பெருமையாக கருதுகிறார்கள்.

திருமணம் பேசி முடிக்கும் மணப் பெண்களுக்கு மணமகன் வீட்டார் முதலில் கேட்கும் கேள்வி பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள் என்பதுதான்.

பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கழுத்தில் `மைனர் செயின்', கையில் பிரேஸ்லட், மோதிரம் என்று நகை அணிவதை விருப்பமாகக் கொண்டுள்ளனர்.

எல்லா தரப்பு மக்களும் விரும்பும் தங்கத்தின் விலை இன்றைக்கு கற்பனைக்கும் எட்டாத அளவில் கிடு, கிடுவென உயர்ந்து விட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை மட்டுமல்லாது வசதி படைத்த பணக்காரர்களையும் இந்த விலையேற்றம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

குறிப்பாக கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் 3 ஆயிரத்து 240 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.

கடந்த ஆண்டில் (2010) இதே மாதத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.1,598-க்கு விற்றது. அதாவது 1 பவுன் விலை ரூ.12 ஆயிரத்து 784-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று மாலையில் ஒரு கிராம் 2003-க்கும், 1 பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இதன் மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.16 ஆயிரத்தை கடந்துள்ளது. 1921ஆண்டு - ரூ.21, 2000 ஆண்டு - ரூ.3,320, 2002ஆண்டு - ரூ.3,368,
2003 முதல் 2005-ம் ஆண்டு வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.4 ஆயிரம் அளவில் கட்டுக்கோப்புடன் விற்பனையாகி வந்தது. இதன் பிறகுதான் இந்த விலையேற்றம்.

2 கருத்துகள்:

  1. உங்கள் வலைத்தளம் தரமானதாகவும் இஸ்லாத்தை உறுதிபட எடுத்தியம்புவதாகவும் இருக்கட்டும். உங்கள் தளத்தின் பெயர் மிக அருமையாக உள்ளது. எல்லோர் மனதில் இலகுபாவ ஒட்டிக்கொள்ளக் கூடிய வார்த்தை இந்தியத் தென்றல். நல்ல தெரிவு. மாசாஅல்லாஹ்.

    அபூ மஸ்லமா
    கைபர் தளம்

    பதிலளிநீக்கு

தாங்கள் சொல்ல நினைப்பது