
பாபாவிற்கு மறு பெயர் அன்பு. சாயி பஜனை சாயி தரிசனம் சாயி உபதேசம் சாயி மோட்சம்.... இது கூவத்தில் மீன் பிடிக்கும் பாமரன் சொன்ன வார்த்தையல்ல.
படித்த மேதைகள் சிந்திக்காமல் சொன்னது. கல்விமான்கள் சொன்னது. ஆன்மீகவாதிகள் சொன்னது. அரசியல் தலைவர்கள் சொன்னது. வர்த்தக பிரமுகர்கள் சொன்னது.
ஆம். உலக மகா மந்திரவாதியின் மாயாஜாலங்களிற்கு இறைவன் படைத்த மூளையை அடகு வைத்த முட்டாள்கள் சொன்னது.
இந்த கெட்டிக்காரர்கள் எல்லாம் முட்டாளாக்கப்பட்டது எவ்வாறு? ஒன்று சாயி பாபாவின் மேஜிக். சாயி பாபா மிகச் சிறந்த மேஜிக் மேதை. இரண்டு சாயி பாபா கூறிய எம்மதமும் சம்மதம் எனும் போலியான சித்தாந்தம்.
ஏழையும் பாமரனும் சாயி வலையில் பெரிதாக விழவில்லை. காரணம் அவன் மனம் வெள்ளையானது. கலப்படமற்றது. கர்த்தரையோ கந்தசாமியையோ கும்பிட்டபடி அவன் பாட்டிற்கு போய் கொண்டே இருப்பான்.
பணக்காரனும் படித்தவனும் அப்படியல்ல. வஞ்சம் நிறைந்த மனதுள்ளவன். நிறைய பொய் பேசுபவன். சுயநலவாதி. சந்தர்ப்பவாதி. ஏமாற்றுக்காரன். தனது குற்ற உணர்வை போக்க வடிகால் தேடி ஓடுபவன். நிம்மதியை தொலைத்து விட்டு தடுமாறுபவன்.
சாயி பாபா எனும் ஏமாற்றுக்கார கழுகிற்கு இரையானதும் இரையாவதும் இவர்கள்தான். சாயி பாபா பற்றி கைபர் தளம்அரங்கத்தில் வந்த கட்டுரையை ஏற்கனவே தந்துள்ளது. இப்போது இது தொடர்பான மேலதிக விசேட காணொளி தொகுப்புக்களின் சுட்டியை தருகிறது. youtube ல் நுழைவதன் மூலம் இவற்றை நீங்கள் காணலாம். ஏன் இந்த சாத்தானின் மரணத்திற்காக பிரார்த்தனையும் செய்யலாம்.
www.youtube.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் சொல்ல நினைப்பது