Pages

புதன், 6 ஏப்ரல், 2011

மலேரியாவை ஒழிக்கும் சிலந்திகள்.


மலேரியாவை ஒழிக்கும் சிலந்திகள்.
பாகிஸ்தானில் மிகவும் பலத்த அடை மழை காரணமாக கடந்த வருடம் சிந்து நதி உடைப்பெடுத்தது. இதனால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 80 வருட காலத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்டு இருந்த பெரிய வெள்ள அனர்த்தம் இது. பாகிஸ்தானிய மொத்த சனத் தொகையில் 08 சதவீதத்தினர் வரை பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள அனர்த்தத்தில் இருந்து தப்பிக் கொள்ள தீர்மானித்தன சிந்து நதியை அண்டிய இடங்களில் வசிக்கின்ற சிலந்திகள்.இத்தீர்மானத்துக்கு அமைய மில்லியன் கணக்கான சிலந்திகள் இங்குள்ள மரங்களில் வசிக்க தொடங்கி விட்டன.இதனால் இங்குள்ள மரங்கள் தோறும் மிகப் பிரமாண்டமான சிலந்தி வலைகளைக் காண முடிகின்றது.

என்றும் இல்லாத புதுமை என்று சிந்து மாகாண மக்கள் அதிசயிக்கின்றனர்.இதே நேரம் இப்பிரமாண்டமான சிலந்தி வலைகளில் சிக்கி நுளம்புகள்(கொசு) பெருமளவில் சிக்கி இறந்து விடுகின்றன.இதனால் சிந்து மாகாணத்தில் மலேரியா நோயின் தாக்கம் பெரிதும் குறைந்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது